search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்"

    • டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.
    • பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் 'மாற்றி யோசி' என வித்தியாசமாக தசரா பண்டிகை கொண்டாடி உள்ளனர்.

    விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகரான டொட்டி பாபு ஆனந்த். இவர் தெற்கு மண்டல் பிரிவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி வார்டு 31-ல் தசரா பண்டிகையை கொண்டாடினர்.

    அப்போது டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.

    பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார். அவர் தெருவில் நின்று கொண்டு போகிற வருகிறவர்களை எல்லாம் கூவி கூவி அழைத்து உயிருள்ள கோழி மற்றும் குவாட்டர் சரக்கை கைகளில் திணித்து தசரா பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த கோழி, மது விவகாரம் ஆந்திரா அரசியலில் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.

    • ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடிகை ரோஜா முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது ஆளும் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

    செம்பருத்தி படத்தில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் உறுதுணையாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை.

    இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார்.

    ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்.

    ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டுமானால் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வரவேண்டும் என்றார்.

    இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாரா லோகேஷ் யுவகலம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் மண்டலம், தாடேரு என்ற இடத்தில் லோகேஷ் மற்றும் தொண்டர்கள் நேற்று பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

    அப்போது பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பாதயாத்திரை சென்ற இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் லோகேஷை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.

    பேனர்களை அகற்றும் படி போலீசார் தெலுங்கு தேசம் தொண்டர்களிடம் தெரிவித்தனர். இதனால் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்தனர்.

    மேலும் அங்குள்ள கட்டிட மாடிகளில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சி கொடியை காண்பித்தபடி பாதயாத்திரையில் கற்கள் மற்றும் கம்புகளை சரமாரியாக வீசி தாக்கினர்.

    இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமராஜு, தொண்டர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். பாதயாத்திரையில் சென்ற வாகனங்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.

    தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர். போலீசார் அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பாதையாத்திரை சென்றதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி பாதயாத்திரையை அப்பகுதியிலேயே நிறுத்தினர்.

    இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது.

    • கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார்.
    • தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கர்நாடகாவை போல் தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியின் மகளும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஷர்மிளா. ஒய் எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவராக உள்ளார்.

    இவர் தெலுங்கானாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று கட்சியை பலப்படுத்தி உள்ளார். ஷர்மிளாவின் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும். இதற்காக ஷர்மிளாவிடம் டி.கே. சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் குடும்ப நண்பர் என்பதால் சந்திப்பு நடந்ததாக ஷர்மிளா தெரிவித்தார்.

    இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. ராமச்சந்திர ராவ் மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சியில் சேரும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்க ஷர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அவ்வாறு இணைக்கப்பட்டால் ஷர்மிளா தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
    • ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புத் திட்டத்தை பிஜு ஜனதா தளம் நிராகரித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றம் இரண்டும் புனிதமானவை என்றும், பிரச்சனைகள் பின்னர் விவாதிக்கப்படலாம் என்றும் அக்கட்சி கூறி உள்ளது.

    இதன்மூலம் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளில் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் கட்சி பிஜு ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

    • ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார்.

    விஜயவாடா :

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.மாநாட்டில், அவருடைய தாயாரும், கட்சியின் கவுரவ தலைவருமான ஒய்.எஸ்.விஜயலட்சுமி உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:-

    என் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரியாகவும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். அதே சமயத்தில், என் மகள் சர்மிளா, தெலுங்கானாவில் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார். என் மகளை ஆதரிக்குமாறு என் மனசாட்சி சொல்கிறது. அவளுக்கு என் ஆதரவு தேவைப்படுவதால், அவளை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.

    அதனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருப்பது சர்ச்சையை உருவாக்கும் என்பதால், கட்சியில் இருந்தும், கவுரவ தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இந்த நிலைமையை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை மன்னியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவரது அறிவிப்பை கேட்டவுடன், தொண்டர்கள், ''வேண்டாம், வேண்டாம்'' என்று கூச்சலிட்டனர். இருப்பினும், ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார். ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருடைய தாயார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    ×